குழந்தை பருவத்தில் பிரிந்த இரட்டையர்கள் கணவன் மனைவி ஆக இணைந்த அதிசயம்!

அமெரிக்காவின் மிஸ்சிசிப்பி மாகாணத்தில் ஜாக்சன் பகுதியை சேர்ந்த 33 வயது கணவன் மனைவி டாக்டரை சந்தித்தனர். திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை.

எனவே செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய டி.என்.ஏ. சோதனை நடத்தினர். இவர்களது இருவரின் ரத்த மாதிரியும் பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனையில் இவர்கள் இருவரும் உடன் பிறந்த இரட்டையர்கள் என கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த டாக்டர்கள் முதலில் இதை நம்பவில்லை. பல தடவை மாறிமாறி பரிசோதித்ததில் இருவரும் அண்ணன்-தங்கை என்பது உறுதியானது.

இது குறித்து அவர்களிடம் விசாரிக்கப்பட்டது. இவர்கள் குழந்தைகளாக இருந்த போது பெற்றோர் கார்விபத்தில் பலியாகி விட்டனர்.

பின்னர் இருவரும் பிரிக்கப்பட்டு வெவ்வேறு குடும்பத்தில் வளர்ந்துள்ளனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் திருமணம் மூலம் கணவன்-மனைவி ஆகியுள்ளனர்.