முடிவை மாற்றிய ரணில்! இன்று நாடு திரும்புகிறார்

நாளை நள்ளிரவில் நாடு திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியட்நாம் பிரதமர் குயென் சுயெனின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்றுக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 16ம் திகதி வியட்நாமிற்கு விஜயம் செய்திருந்தார்.

எனினும் மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வியட்நாம் விஜயத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு நாடு திரும்ப உள்ளார்.

முன்னதாக பிரதமர் வியட்நாம் விஜயத்தை முடித்துக் கொண்டு நாளை நள்ளிரவு நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அனர்த்தம் காரணமாக விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் இன்று நாடு திரும்புகிறார்.

இதேவேளை, வியட்நாமிற்கான விஜயத்தின் போது சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.