பலன்கள் தரும் ஆன்மிக வழிபாடுகள்

* வீட்டில் விரதமிருந்து சுமங்கலி பூஜை செய்தால், சவுபாக்கியம் கிடைக்கும், இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

* வீட்டில் துளசி வளர்த்தால், செல்வம் பெருகும், பாவங்கள் நீங்கும்.

* சான்றோர்களை உபசரித்து ஆசிபெற்றால், ஆயுள் விருத்தி உண்டாகும், சகல தோஷமும் விலகும்.

* விருந்தினரை மனம் நோகாமல் உபசரித்தால், புண்ணியம் சேரும்.

* கோவில் திருப்பணிக்கு உதவினால், மறுபிறப்பு இல்லாத நிலை உருவாகும், உறவினர் பகை மாறும்.

* கோவிலில் உழவாரப் பணிசெய்தால், வாழ்க்கையில் வளர்ச்சி கூடும், காரிய தடை விலகும்.

* வீட்டில், ஆலயத்தில் தெய்வீக மரம் வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், மழை வளம் பெருகும்.