நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சார தடை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அதிகாலை திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தி்ல் உள்ள முதலாவது மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் இரத்தினபுரி, மத்துகம, கொட்டுகொட, மாத்தறை, அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, கொஸ்கம உட்பட பல பிரதேசங்களுக்கு இவ்வாறு மின்சாரம் துன்டிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் தற்போது அந்த நிலைமை சீராக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.