எதிர்வரும் தேர்தல்களின் போது இளைஞர்களுக்கு 50 வீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் சாந்த பண்டார தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
கடந்த 1981ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கிராம சபைகள் சட்டத்தின் போது தேர்தல்களில் இளைஞர்களுக்கு 40 வீத வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதன் காரணமாக ஏராளமான புதியவர்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் தற்போது பெண்களுக்கு 25 வீத வாய்ப்பு ஒதுக்குவதற்கான சட்டமூலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு குறித்து யாரும் அக்கறைப்படுவதாக இல்லை.
எனவே எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் இளைஞர்களுக்கு 50 வீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை ஒன்றை முன்வைத்து சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி சார்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் சாந்த பண்டார தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.







