கர்ப்பிணி தாய்மார்களுக்கு காலாவதியான உணவு பொருட்கள் மட்டுவில் சம்பவம் !!

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு  காலாவதியான,பழுதடைந்த உணவுகள் வழங்கப்படுகின்றது என்று விசனம் தெரிவித்துள்ளார்கள்.  சுகாதாரத்திற்கு முரணான வகையில் இருக்கும் இந்த உணவு பொருட்கள்  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசாங்க மானியடிப்படையில் இவை வழங்கப்பட்டு வருகின்றது.  அரசாங்கத்தினால் இருபதினாயிரம் பெறுமதித்தொகையில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகின்றது.இவ்மானியத்தில் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான வகையில் கருவாடு,தானியங்கள்,பால்மை வகைகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.  இவற்றில் பழுதடைந்த, புளுப்பிடித்த,காலாவதியான உணவுப்பொருட்கள் பிரதேசத்தில் உள்ள கூட்டுறவுக்கடைகளில் வழங்கப்பட்டுள்ளது.  இந்த உணவு பொருட்கள் தொடர்பாக வெல்லாவெளி சுகாதார பரிசோதகர் மற்றும் வைத்தியர்கள் இவற்றை பாராமல் வழங்குவது ஏன் ?