இன்றைய ராசி பலன்கள் 13.04.2017

  • மேஷம்

    மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப்பெருகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடை வார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தல் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். போராட்டமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அநா வசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • தனுசு

    தனுசு: தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சிறப்பான நாள்.

  • மகரம்

    மகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சி தங்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.