நாய் மற்றும் பூனை இறைச்சி சாப்பிட அரசாங்கம் அதிரடி தடை

தைவான் நாட்டில் நாய் மற்றும் பூனை இறைச்சியை பொதுமக்கள் சாப்பிட தடை விதிக்கும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தைவான் நாட்டில் நாய் மற்றும் பூனை இறைச்சியை விரும்பி சாப்பிடும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இதனால் இவ்விலங்குகளின் எண்ணிக்கை குறைவதுடன் விலங்குகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று அதிரடியாக புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் அடிப்படையில், இனிவரும் நாட்களில் நாய் மற்றும் பூனை இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுவதுடன், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசியாவிலேயே நாய் மற்றும் பூனை இறைச்சியை சாப்பிட சட்டப்பூர்வமாக தடை விதித்துள்ள முதல் நாடு தைவான் என்பது குறிப்பிடத்தக்கது.