அதிக வெப்பத்தினால் ஒருவர் பரிதாபமாக பலி

இலங்கையில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக முதலாவது உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தும்மலசூரிய பகுதியில் சைக்கிளில் பயணித்த 50 வயதுடைய நபர் ஒருவர் மாரடைப்பினால் நேற்று உயிரிழந்துள்ளார்.

அதிக உஷ்ணம் காரணமாக ஏற்பட்ட சோர்வே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக உஷ்ணமாக நேரத்தில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் திடீரென கீழே விழுந்துள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனை பரிசோதனையை தொடர்ந்து, வெப்ப சோர்வு காரணமாகவே இந்த மாரடைப்பு ஏற்பட்டிருக்க கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.

மரணம் ஏற்படுவதற்கு முன்னர் அவர் மது அருந்தியிருந்தார் எனவும் வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை அதிக உஷ்ணமான காலப்பகுதியில் அநாவசியமாக வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.