சிங்கப்பூரிலிருந்து கொழும்புக்கான புதிய விமான சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பிரபல்யமான விமான சேவையான SilkAir நிறுவனம், இலங்கை வரையில் தமது சேவையை விஸ்தரித்துள்ளது.
வாரத்திற்கு மூன்று முறை கட்டுநாயக்க – சிங்கபூருக்கு இடையிலான விமான சேவை இடம்பெறவுள்ளது.
புதிய விமான சேவை நேற்று காலை 08.50 மணியளவில் சிங்கப்பூர், ஷெங்கி விமான நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து, 10.05 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதன்போது MI428 என்ற விமானத்திற்கு பாரம்பரிய நீர் பீய்ச்சு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலைய நிகழ்வுகள் காரணமாக 11.05க்கு பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய விமானம் காலை 11.45க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்த விமானம் மாலை 6.10 மணியளவில் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளது.
வணிக வகுப்பு மற்றும் சாதாரண வகுப்புகள் ஆகிய இரண்டுமே இந்த விமான சேவையின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
SilkAir விமான சேவை 15 நாடுகளில் 53 மேலதிக சேவைகளை அதிகரித்துள்ளது.







