லண்டன் நகர நீதிமன்ற நீதிபதியாக அனுஜா ரவிந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியில் அமரும் இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் என்ற முறையில் இந்தியர்களுக்கு அவர் பெருமை தேடி தந்துள்ளார்.
சுவீடன் நாட்டில் குடியேறிய இந்திய வம்சாவழி தம்பதியரின் மகளாக அந்நாட்டில் உள்ள டுன்டீ நகரில் பிறந்த அனுஜா, 1970-ம் ஆண்டு வாக்கில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். பின்னர் சட்டம் பயின்ற இவருக்கு 1989-ம் ஆண்டில் லண்டனில் இருந்து கல்வி உதவித்தொகையுடன் அங்குள்ள நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து, சுவீடன் நகரில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கு வந்தார். லண்டன் நகரில் உள்ள நீதிமன்றங்களில் அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞராக சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றிய அனுஜா, லண்டன் நகரில் உள்ள ஓல்ட் பெய்லி கிரிமினல் நீதிமன்றத்தின் நீதிபதியாக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
இந்த பதவியில் அமரும் முதல் இளம்வயது நீதிபதி அனுஜா(49) என்பது குறிப்பிடத்தக்கது.