ஆர்.கே.நகரில் ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தல் மே மாத இறுதியில் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதால், இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக, அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடக்கும் போது எந்த தொகுதியும் காலியாக இருக்கக் கூடாது.
எனவே தற்போது ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையம் மே மாத இறுதியில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.







