களவாடும் அரசியல்வாதிகளுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசியப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எவரேனும் நாட்டின் அரச சொத்துக்களை கொள்ளையிடுகின்றார் என்றால் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றார் என்றால் எந்தக் கட்சியை சேர்ந்தாலும் எவ்வாறான தகுதியைக் கொண்டிருந்தாலும் அவ்வாறான அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நான் எந்தவொரு குற்றவாளியையும் சுத்தப்படுத்தப் போவதில்லை.
அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அரச சொத்துக்களை மோசடி செய்து தங்களது அடி மடிகளை நிரப்பிக் கொள்ள இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.