குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குஜராத் சட்டசபையில் விலங்குகளை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி பசுக்களை கொன்றால் 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பசுக்களை கொல்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிரந்தரமாக பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுக்களை கொல்பவர்கள் வாரண்ட் இன்று கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாது என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. பசுக்களை காக்கும் இந்த கடுமையான சட்டத்திருத்தத்துக்கு அம்மாநில முதல்வர் விஜய் ருபாணி ஒப்புதல் அளித்துள்ளார்.