செவ்வாய் தோஷம் நீங்க முருகன் ஸ்லோகம்

நாரதாதி மஹாயோகி ஸித்த கந்தர்வ ஸேவிதம்
நவவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்
பகவான் பார்வதி ஸூநோ ஸ்வாமின் பக்தார்திபஞ்ஜன
பவத் பாதாப்ஜயோர்பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

-ஸுப்ரமண்ய மூலமந்திர ஸ்தோத்ரம் (குமார தந்த்ரம்)

பொதுப் பொருள்:

நாரதர் முதலான சிறந்த யோகிகளாலும் சித்தர்களாலும் கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரே முருகப் பெருமானே, நமஸ்காரம். வீரபாகு முதலான ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதங்களை உடையவரே, நமஸ்காரம். என் வாழ்வில் வளம் சேர்க்க அருள் புரிவீராக! பகவானே, பார்வதி குமாரனே, ஈசனே, செவ்வாய் கிரக பாதிப்புகளை நீக்குபவரே, பக்தர்தம் கவலையெல்லாம் போக்கும் முருகப் பெருமானே நமஸ்காரம்.

(தைப்பூச தினத்தன்று இந்த துதியை பாராயணம் செய்தால் முருகப் பெருமான் அருளால் செவ்வாய் தோஷம் தீரும். செல்வ வளம் பெருகும்.)