நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.
தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. லாமம் 50 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

61-வது டெஸ்டில் விளையாடிய அவருக்கு இது 17-வது செஞ்சூரியாகும். இதன்மூலம் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் முதல் இடத்தில் இருக்கும் மார்ட்டின் குரோவை சமன் செய்தார்.

மேலும் 5 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் வில்லியம்சன் படைத்தார்.







