ஆர்கே நகர் தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது. ஓபிஎஸ் அணியின் மதுசூதனன், சசிகலா அணியின் தினகரன், திமுகவின் மருதுகணேஷ் என மும்ம்னைப்போட்டி நிலவுகிறது. ஓபிஎஸ் அணியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மதுசூதனனுக்கு எதிராக அரசியல் செய்யவே தயங்குகிறார்கள் அதிமுக ஆட்கள். அவரை எதிர்த்து எப்படி பேசுவார்கள்?
ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் அதிமுகவில் சீனியர். அவைத் தலைவராக இருந்தவர். இன்று அமைச்சர்களாக இருப்பவர்களே மதுசூதனன் பேச்சைக் கேட்டு நடந்தவர்கள் தான். எனவே மதுசூதனனை எதிர்த்துப் பேச தயங்குகிறார்களாம்.
மதுசூதனனுக்கு கட்சியைத் தாண்டி செல்வாக்கு இருக்கிறது. ஜெயலலிதா போட்டியிட்ட போதே தனக்கு மாற்று வேட்பாளராக சொல்லியது மதுசூதனனைத்தான். தொகுதியை அதிமுக தக்க வைத்துக்கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் மதுசூதனன்தான்.
அதிமுக சீனியர்கள் மட்டுமல்ல திமுகவின் சேகர்பாபுவே மதுசூதனிடம்தான் அரசியல் பயின்றார். அவர்தான் திமுகவுக்கான தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே மதுவை எதிர்க்க, எதிர்த்து பிரசாரம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் முக்கிய நிர்வாகிகள்.