நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க 22 நிறுவனங்களுடன் டெல்லியில் இன்று மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர், தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் பேசுகையில், நெடுவாசல் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும், பெட்ரோலியத்துறை அதிகாரிகள் விரைவில் தமிழகம் வந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட தேவையில்லை, மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு ஹைட்ரோகார்பன் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு தேவை. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தம் மட்டும் போடப்பட்டுள்ளது, திட்டத்தை செயல்படுத்த நாட்களாகும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.