நல்லாட்சி அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்துள்ளது!

அரசாங்கம், ஜெனீவா யோசனையை அமுல்ப்படுத்த மேலும் இரண்டு வருடங்கள் பெற்றுக் கொண்டதன் ஊடாக நாட்டை கட்டி கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகிய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஒளிபரப்பான விளம்பரம் ஒன்றுக்கான பணம் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்படாமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சுமார் 45 நிமிடங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.