தீபாவின் கணவர் மாதவன் இன்று சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,

எனக்கு தினசரி மிரட்டல்கள் வருகிறது. இனிமேல் மிரட்டல் வந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன். நான் எந்த பணப்பெட்டியுடன் எங்கும் ஓடவில்லை சென்னையில் தான் தங்கி உள்ளேன்.

என் பெயர் மாதவன் தான் பேட்ரிக் என கூறப்படுவது உண்மையல்ல. நான் அதிமுக தொண்டன் என்பதால் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு என்னால் போட்டியிட முடியும்.
ஆளும் கட்சியை எதிர்க்க என்ன பயம்? மிரட்டல் குறித்து என் மனைவி தீபா வேண்டிக்கொண்டதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. தீபாவை முதல்வராக ஆக்கியே திருவேன்.
விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். முதற்கட்டமாக திண்டுக்கல், தஞ்சை மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாவும், கட்சிக்கும் தீபாவிற்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்றார் மாதவன்.







