தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு மாணவர்களுக்கு உரிமையுண்டு என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை சில தரப்பினர் அரசியல் அழுத்தங்கள் காரணமாக தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்க்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தகுதியிருந்தும் அரசாங்க பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர முடியாத மாணவ மாணவியர் தனியார் பல்கலைக்கழங்களின் ஊடாக கல்வியைத் தொடர்வில் தவறில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களின் பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி.யின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.







