தீபாவை விட்டு ஓட்டமெடுக்கும் மாஜி எம்.எல்.ஏக்கள்.!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு முன்புவரை தீபா யார் என்றே அதிமுகவில் இருக்கும் பல பேருக்கு தெரியாது. அவர் இறந்த பின்புதான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என்று தெரியவந்தது.

இதனால் தொண்டர்கள் பெருமளவு தீபா பக்கம் சென்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தீபா ஒரு புதிய அமைப்பை தொடங்கினார்.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் தனித்து போட்டியிடவும் முடிவு செய்து தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து தீபாவிற்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலர் ஆதரவு அளித்து வந்தனர்.

இதற்கிடையில் தீபாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஏற்படுத்திய அதிருப்தியால் அவருக்கு ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இருந்த திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ சவுந்தரராஜனும் ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிட்டார்.

அதேப்போல் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், சீர்காழி, நாகை உள்ளிட்ட பல மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏக்களும் தீபாவை விட்டு விலகிவிட்டனர்.