கால பைரவ அஷ்டமி விரதம்!

முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது.

பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது. கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.

சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீபைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை விரதமிருந்து வழிபட உகந்த நாட்கள்தான்.

ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது. பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாய் மான் தோலில் அமர்ந்து தினம் 1008 வீதம் உரு ஜெபித்து பூஜிக்க வேண்டும்.

சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப்பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும். ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். அகந்தை பொய், அக்கிரம அநியாயக்காரர்களை அழித்து நீதியை நிலைநாட்டும் குறிக்கோளோடு வடிவம் எடுத்தவர்.

செய்வினை, சூனிய கோளாறுகள், பேய், பிசாசு, முனி, காட்டேரி போன்ற பாதிப்பிலிருந்து நீங்க யந்திரத்தை 108 உரு ஜெய பூஜை செய்து கையில் தாயத்தாக அணிந்து கொள்ளலாம். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்.

இன்று தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவருக்கு விரதம் இருந்து ஒருவேளை மட்டும் உணவருந்தி மாலையில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு தீபம் ஏற்றி செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.