அஜித்தின் நெருங்கிய நண்பர் விபத்தில் மரணம்: அதிர்ச்சி தகவல்

நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸிலும் நல்ல ஆரவம் உள்ளவர். ஒரு காலகட்டத்தில் கார் ரேஸ் மட்டும் தான் தன் வாழ்க்கை என இருந்தார்.

இந்நிலையில் அவர் கார் ரேஸில் இருந்த போது அவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் அஸ்வின் சுந்தர்.

அவர் தன் மனைவியுடன் காரில் சென்ற போது கார் கண்ட்ரோல் மீறி மரத்தில் மோதி வெடித்துள்ளது.

இதில் அஸ்வின் அவருடைய மனைவி இருவருமே இறந்துவிட்டார்கள், இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் இரண்டு தினங்களுக்கு முன் தான் விவேகம் படத்திற்காக பல்கேரியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.