தமிழக அரசின் 2017 – 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தாக்கல் செய்தார்.
முன்னதாக சசிகலா, தினகரன் பெயர்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கடும் அமளியின் மத்தியில் 2017 – 18ம் ஆண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதன் விவரம்:
* தமிழகத்தில் உள்ள நாட்டு மாடு இனங்களான காங்கேயம், பர்கூர், உப்பளஞ்சேரி இன மாடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
* உள்ளூர் இனமான புலிகுளம் மற்றும் ஆலம்பாடி பேன்ற இதர இனங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2017-18 ஆண்டில் 25 கால்நடை கிளை மையங்கள் தரம் உயர்த்தப்படும்
*புதிதாக 25 கால்நடை கிளை மையங்களும் அமைக்கப்படும்.
*2017-18 ஆண்டில் ஏழை பெண்களுக்கு 12 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்படும்.
* இலவச ஆடு மாடுகள் வழங்க 182 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது
* நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம்
*கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ25 கோடி நிதி
*மதுரையில் 40 கோடி செலவில் 25 ஆயிரம் லிட்டர் கொள்ளவு திறன் கொண்ட நறுமண பால் தயாரிக்கும் மற்றும் புதிய உயர் வெப்பநிலையில் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்.
*ஆவின் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார்.