புதிய அரசியல் யாப்பு உருவாவதற்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்கள், அரசியல் எதிர்காலம் இல்லாதவர்களே என சட்டத்தரணி பிரிட்டோ பிரணாந்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசியல் எதிர்காலம் இல்லை. இதனால் தான் அவர் இந்த அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு எதிராக குரல் எழுப்புகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான தேசிய செயற்குழுவின் முதலாவது அமர்வு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் சட்டத்தரணி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன பொது அபேட்சகராக வருவதற்கு முன்னர் நாம் அவருடன் செயற்படவில்லை. எமக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் அவர் அப்போது வரவில்லை.
இருப்பினும், அப்போதைய மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து அவருக்கு வெளியே வருவதற்கு இருந்த தைரியத்துக்காக நாம் அவருக்கு மரியாதை செலுத்துகின்றோம்.
நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்பதாகும். தமிழ் மக்களினாலும் ஏற்றுக் கொள்ள முடியுமான புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருமாறும் நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.