சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது!

சூழ்ச்சிகளால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெல்லவாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது ஊடகச் சுதந்திரத்தை பயன்படுத்தி வெளியிடப்படுகின்ற சில செய்திகள் அரசாங்கத்துக்கு எதிரான அநாவசிய விமர்சனங்களாக இருக்கின்றன.

இவற்றைப் பார்க்கின்றவர்கள் அரசாங்கம் நாளையே கவிழ்ந்துவிடும்போல் இருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் இவ்வாறான போலி சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை நாளையே கவிழ்க்க முடியாது.

அவ்வாறு கனவு கண்டுக் கொண்டிருக்கின்றவர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை.

அரசாங்கம் என்ற வகையில் பொதுமக்களின் முக்கியத் தேவைகளை அறிந்து செயற்படுகிறோம்.

பொருளாதார அபிவிருத்திகளின் போது, அதிக ஏழ்மையான மாவட்டங்களுக்கே முக்கியவத்துவம் வழங்கப்படுகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.