இலங்கை வரும் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்!

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் சே நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

தென்கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது.

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடைசியாக 1986ஆம் ஆண்டு, தென்கொரிய வெளிவிவகார அமைச்சராக இருந்த லீ வொன் யுங் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் நாளை மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின் மூலம் இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகள், இருதரப்பு ஒத்துழைப்பு என்பன வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.