வவுனியாவில் காதல் விவகாரம்: வாள்வெட்டுத் தாக்குதல் மற்றும் வீடு தீக்கிரை!!

வவுனியாவில் காதல் விவகாரத்தினால் வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இனந்தெரியாத நபர்களினால் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஒருவருடகாலமான இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்து வந்துள்ளது.

குறித்த நபர்களின் காதல் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததுடன் பெண் வீட்டார் அந்த பெண்ணை வெளிநாட்டிக்கு அனுப்புவதற்குறிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையறிந்த பெண் தனது காதலுக்கு இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். அத்துடன், வெளிநாடு சென்றால் நான் இறந்து விடுவேன் என்னை எங்கேயாவது கூட்டிச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இவ்விடயம் கதைத்து ஒருவாரத்தின் பின்னர் இருவரும் வீட்டை விட்டு சென்று கொழும்பில் தனிமையில் ஒருமாத காலம் வாழ்ந்து வந்துள்ளனர்.

பெண் வீட்டார் தாங்கள் நல்ல சாதியெனவும் ஆண் வீட்டார் தரக்குறைவான சாதியயெனவும் தெரிவித்து. இவர்களை தேட ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் கிடைக்காவிடத்து பெண்ணின் புகைப்படத்தினை முகநூலில் பிரசுரித்து இவரை காணவில்லை கண்டுபிடித்த தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இவர்களின் முகநூல் பதிவினை கண்ணுற்ற ஒருவர் இவர்களை கொழும்பில் வைத்து இவர்களை அடையாளம் கண்டுள்ளார். உடனே இவர்களின் முகநூல் பதிவில் காணப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு அவர்கள் இங்கு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பிற்கு விரைந்த பெண் வீட்டார் பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து தப்பித்து வவுனியாவிற்று வந்த பெண் தனது காதலுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு தான் தற்போது வவுனியாவில் நிற்கின்றேன் என்னை அழைத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.

உடனே வவுனியாவிலிருந்து சென்ற இளைஞன் பெண்ணை அழைத்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். பெண் வீட்டாரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு கூறியுள்ளனர்.

ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த பெண் மற்றும் இளைஞனை சேர்ந்து செல்லுமாறு பணித்துள்ளனர். இருவரும் இளைஞனின் வீட்டில் இருந்த சமயத்தில் நேற்று மதியம் 2.30 மணியளவில் பெண் வீட்டார் வெள்ளை நிற வாகனத்தில் இளைஞனின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டு பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் பெண்ணின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவினர் தீக்கிரையான வீட்டில் கைரேகையடையாளங்களை பார்வையிட்டதுடன் இளைஞன் வீட்டார் மீது தாக்குதல் மேற்கொண்ட வாள்கள் மற்றும் பாரிய கத்திகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பெண் வீட்டாரின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.