​பிச்சை எடுக்க வரவில்லை: விமல் நாடாளுமன்றில் எச்சரிக்கை!

நாடாளுமன்றில் எங்களது உரிமைகள் மறுக்கப்பட்டால் தொடர்ந்து நாடாளுமன்றத்தை நடத்திச் செல்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கே நாம் செயற்பட்டு வருகின்றோம். அரசாங்கம் வழங்கும் 2500 ரூபா கொடுப்பனவை பிச்சை எடுப்பதற்காக வரவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி விலகிச் சென்ற போது அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் நான் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிச் சென்ற போதும் அனுமதி வழங்கப்பட்டது.

இப்படியான வரலாறுகள் இருக்கும் போது, தங்களது உரிமையை வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் விமல் கோரிக்கை விடுத்துள்ளார்.