தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி – ஒரு கப்
முந்திரி, பாதாம், வேர்க்கடலை – 1/4 கப்
பசு நெய், நாட்டு சர்க்கரை – தலா 3/4 கப்

செய்முறை :
* முந்திரி, பாதாம், வேர்க்கடலையை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* கவுனி அரிசியை நன்கு சுத்தம் செய்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து அதில் அரைத்த கவுனி மாவை போட்டு சிறு தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.
* அதன் பின் பொடித்த முந்திரி, பாதாம், வேர்க்கடலைக் கலவையை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும்.
* அடுத்து அதில் பொடித்த நாட்டு சர்க்கரை, நெய், வறுத்த மாவு சேர்த்து நன்றாக கிளறவும்.
* இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே சிறு உருண்டைகளாகப் பிடித்து எடுக்க வேண்டும்.
* கருப்பு நிற அரிசியான கவுனி அரிசியில் சத்தான சுவையான லட்டு தயார்.







