முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகர் ஆனந்த் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுகவில் இருந்து வெளியே வந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ். தொடர்ந்து சசிகலா குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் குற்றச்சாட்டை வைத்து வரும் நடிகர் ஆனந்த் ராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், இதுகுறித்து மக்களிடையே சந்தேகம் இருப்பதாகவும் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஒரு கட்சி ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சென்று விடக் கூடாது என்றும் நடிகர் ஆனந்த் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







