ரவிராஜ் கொலை: சந்தேகநபரொருவருக்கு மீண்டும் அழைப்பாணை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை சம்பவம் தொடர்பாக பிரதிவாதியொருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தினால் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது.

விடுவிக்கப்பட்ட 5 சந்தேக நபர்களில் இரண்டாவது சந்தேக நபருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மார்ச் 31ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவிராஜின் மனைவியினால் குறித்த வழக்கு தொடர்பான மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை அடிப்படையாக கொண்டு நேற்று இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.