உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை தொடர்பான போராட்டங்களிலோ அல்லது ஏனைய போராட்டங்களிலோ கலந்துகொள்ள முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வியமைச்சு சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றுநிருபமொன்றின் மூலம் அறிவித்துள்ளது.
அத்துடன், வெளியார் எவரும் தனியாகவோ அல்லது குழுவாகவோ பாடசாலை நேரங்களில் பாடசாலை வளவுகளுக்குள் பிரவேசிப்பதற்கோ, ஆசிரியர்களையோ மாணவர்களையோ சந்தித்து உரையாடுவதற்கோ அனுமதி வழங்கக்கூடாதென அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எவராவது இந்தத் தடையை மீறும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டுமெனவும் அந்த சுற்றுநிருபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.







