அமெரிக்காவில் இந்தியர் சுட்டு கொல்லப்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒலாதே பகுதியில் உள்ள மதுபான பாரில் சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீனிவாஸ் என்ற இந்தியாவை சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரை சுட்ட ஆடம் பூரிண்டன் எனும் நபர், என் நாட்டை விட்டு வெளியேறு என்று கூறிக்கொண்டே சுட்டுக் கொன்றார்.
இந்த சம்பவம் குறித்து இதுவரை கருத்து கூறாமல் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முதல் முறையாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், நாம் கொள்கையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், வெறுப்புணர்ச்சியை கண்டிக்கும் விடயத்தில் அமெரிக்கா என்றுமே ஒன்றிணைந்து தான் செயல்படும் என கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமெரிக்காவில் யூத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது இனவெறி தாக்குதல், இதேபோல கன்சாஸ் மாகாணம், ஒலாத்தே சம்பவத்தின் முதல்கட்ட தகவல்கள் மிகுந்த கவலையளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







