தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி சாமியார் உடலில் இறங்கி தான் இறந்து 75 நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலமானார்.
அவர் இறந்து இரண்டு மாதங்களை கடந்திருந்தாலும் அவரது மரணம் பல்வேறு மர்மங்களாகவே இருந்து வருகிறது.
இதுகுறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டிற்கு திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்துள்ளார்.
அதன்பின் அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும், இதனால் பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட போது, கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாகவும், அந்த ஆவி பேசுவது போலவும் பேசியுள்ளார்.
மேலும் ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும்.
அவர் என் அன்புக்கு பாத்தியமானவர், அவருக்கு உறுதுணையாக என்றும் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள், அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது.
தீபா கனவிலும் பேச நினைத்தேன், அவரது கணவரை சந்தித்து பேசினேன், அவரிடமும் எல்லா விடயங்களையும் தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.







