ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்யும் எதிர்க்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் பொதுமக்களை பிழையான வழியில் இட்டுச்செல்லும் நோக்கில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் 2021ம் ஆண்டு வரை சமகால அரசாங்கம் உறுதியான நிலையில் இருக்கும் விசேட செயற்றிட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பேரதனை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அமுனுகம இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தமது கட்சி சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கை வெற்றியளிக்கவில்லை.
பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கட்சியொன்று இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது சிறந்த முயற்சி அல்ல என்றும் விசேட செயற்றிட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.