புலி கால்களுக்கு அடுத்து சீகிரியாவின் அடுத்த சர்ச்சை!

காசியப்பனின் இருப்பிடம் என அடையாளப்படுத்தப்பட்ட சீகிரியா தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

முன்னதாக சீகிரியா மலைக்குன்றிலுள்ள இராஜமாளிகைக்கு செல்வதற்கான குன்றின் வாயிலில் இருக்கும் இரு பாதங்களும் சிங்கத்தின் பாதங்கள் அல்ல அவை புலியின் பாதங்கள் என்ற கருத்துக்கள் பரவிவந்தன.

தம்புளை – ரங்கிரி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் குறித்த சர்ச்சையான செய்தியை தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று சீகிரியாவுக்கு இரு கதவுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மேற்கு பகுதியில் உள்ள பிரதான கதவினை தவிர்த்து, கிழக்கு பகுதியிலும் கதவு ஒன்று இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் இது தெரிய வந்துள்ளதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.