அதிகளவு தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல்

உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்துவிடும். சோடியம் போன்ற உப்புச்சத்துப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதால், அவை ரத்தத்தில் கலந்து சில நேரங்களில் ஏதாவது ஓரிடத்தில் ரத்த நாளங்களில் படிந்துவிடக்கூடும்.

நாளடைவில் அவை ரத்தத்திலேயே தங்கி, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னை வரக்கூடும்.

சாப்பிட்டதும் ஒரு டம்ளருக்குக் குறையாமல் தண்ணீர் குடிப்பதால், உடனடியாக உப்பு மற்றும் இதர பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

தினமும் சரியான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் நுண்ணுயிரிகளும், கிருமிகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

ஆனால் இந்த தண்ணீரை அதிகமாக குடிக்கும்போது ஆபத்துகள் ஏற்பட் வாய்ப்புள்ளது.

அதிகமாக தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்..?

சிலர் ஒரே நேரத்தில் அதிக தண்ணீரைக் குடிப்பார்கள். குடிக்கும் நீரானது ரத்தத்தில் கலந்து, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சென்று, இறுதியாக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும்.

இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவு நீரைக் குடிப்பதால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.

சிறுநீரகத்தில் சேகரமாகும் தேவையற்ற கிருமிகளையும், பொருட்களையும் சுத்திகரிக்கும் பணியைச் செய்ய லட்சக்கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன.

தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக தண்ணீரைக் குடிக்கும்போது சிறுநீரகத்துக்கும், நெஃப்ரான்களுக்கும் அதிக வேலைப்பளு கொடுக்கப்படும். இதனால் நெஃப்ரான்கள் செயலிழந்து, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது.

வாகனப் பயணங்களில் சிலர் அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், சிறுநீர் வெளியேற்ற முடியாமல் இருப்பார்கள்.

இப்படித் தொடர்ந்து பல மணி நேரம் சிறுநீரை அடக்கும்போது, உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய தேவையற்ற கழிவுப் பொருட்கள் பல மணி நேரம் சிறுநீர்ப் பையிலேயே தங்கியிருக்கும்.

இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுவது போன்ற யூரினரி இன்ஃபெக்ஷன் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது என உணவியல் வல்லுநர் தெரிவித்துள்ளார்.