ஓ.பி.எஸ். ஒரு தீய சக்தி! விஜயசாந்தி

சசிகலா அணிக்கு திடீரென ஆதரவு அளித்து வருகிறார் சினிமாவில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஓரங்கட்டப்பட்ட விஜய சாந்தி.

ஆந்திர அரசியலில் செல்லா காசாகியுள்ள விஜயசாந்தி தமிழக அரசியல் பக்கம் ஒதுங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது, ” ஓ.பி.எஸ் உள்ளிட்ட தீய சக்திகள் மாநிலத்தின் அமைதியை குலைக்க பிரச்சனைகளை உருவாக்கின.

அதனை வெற்றி கொண்ட, பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு பக்கம் கட்சியை பாதுகாக்க சின்னம்மா இருக்கிறார். மறு பக்கம் தீய சக்திகளோடு ஓ.பி.எஸ். இருக்கிறார்.” இவ்வாறு விஜயசாந்தி கூறியுள்ளார்.