தாயகத்தை அதிகம் விரும்பும் புலம்பெயர் இலங்கையர்கள்!

இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் புலம்பெயர் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒரு மாதத்திற்கு 2000 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் இலங்கையர்கள் 1743 பேருககு நேற்று இரட்டை குரியுமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வரையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் 20 ஆயிரம் பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.