தலைக்கவசம் அணிதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் முழுமையாக முகத்தை மூடும் தலைக்கவசத்தை அணிவதற்கு எதிரான தடைக்கு விதிக்கப்பட்டிருக்கும் இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(20) இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பான மனு இன்றை தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய நீதியரசர்கள் குழாம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும், வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.