இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
கருணாசேன ஹெட்டியாராச்சி மருத்துவ விடுப்பைப் பெற்றிருப்பதால், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலராக முன்னாள் புத்தளம் மாவட்டச் செயலர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..