மஹிந்தவை கைது செய்ய நடவடிக்கை! ஆதாரங்களை சேர்க்கும் ஆணைக்குழு!!

விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணையின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச,

நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளது. அரிசி விலை 100 ரூபாயை தான்டியுள்ளது.

2005 ஆம் ஆண்டில் இருந்து காலை சாப்பாட்டிற்கு எவ்வளவு செலவு? பகல் சாப்பாட்டிற்கு செலவு? இரவு சாப்பாட்டிற்கு எவ்வளவு செலவு? வீட்டில் எத்தனை பேர் உள்ளனர். எரிவாயு அடுப்புகள் எத்தனை உள்ளது? குளிர்சாதன பெட்டி இருந்ததா? என என்னிடம் வினவுகின்றார்கள்.

எனது தந்தையை இலக்கு வைத்து இவை எல்லாம் என்னிடம் கேட்கின்றார்கள். எங்களை கைது செய்ய முடியாவிட்டால் நான் கூறும் ஒரு விடயத்தை வைத்து என தந்தையை குறி வைக்கின்றார்கள் என்று தான் கேட்கப்பட்ட கேள்விகளில் இருந்து தெரிகின்றது.

எனினும் நீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளித்து இவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கின்றோம். மீண்டும் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதென நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.