விரைவில் இலங்கை வரும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர்!

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அடுத்த சில வாரங்களில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், சீனா, இலங்கை, பங்களாதேசுக்கான பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இந்திய- இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக்  கொண்டே இவரது பயணம் அமைந்திருக்கும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம், 15 ஆயிரம் ஏக்கரில் கைத்தொழில் வலயம் என, முக்கியமான திட்டங்களில் சீனா முதலீடுகளை மேற்கொள்ளுகின்றது.

இந்த நிலையிலேயே, இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.