ஜெயலலிதாவுக்கு தளபதியாக இருந்தவர் என மற்றவர்கள் தன்னைக்கண்டு அஞ்சுவதாக சசிகலா தெரிவித்துள்ளார். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார்.
கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா நேற்று இரண்டாவது நாளாக சந்தித்தார். அப்போது அவர்களிடம் சசிகலா பேசினார்.
கட்சியை அழிக்க நினைத்தவர்கள் அதிமுக பொதுச்செயலாளராக தான் பதவியேற்றப் பிறகு தன்னைப் பற்றி விசாரித்ததாக சசிகலா தெரிவித்தார். தான் எப்படி, தன்னுடைய குணாதசியங்கள் என்ன, தான் எதற்கு படிவேன் என்பது குறித்தெல்லாம் விசாரித்தாக கூறினார்.
விசாரித்தவர்களிடம் ஜெயலலிதாவுக்கு பின்னிருந்து தான் தளபதியாக செயல்பட்டதை அறிந்துள்ளனர். கட்சி கஷ்டத்தை சந்தித்தபோதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தோள் கொடுத்து தூக்கியவர் சசிகலா என தெரிந்து விசாரித்தவர்கள் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அஞ்சி ஓடுவதாக சசிகலா தெரிவித்தார். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்று கூறிய அவர், தான் எந்த வலையிலும் சிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு தளபதியாக இருந்தவர் என மற்றவர்கள் தன்னைக்கண்டு அஞ்சுவதாக சசிகலா தெரிவித்துள்ளார். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார்.







