வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு அரசாங்கத்தின் அதிரடி எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரியும், பணிப்பெண்களின் குடும்பம் தொடர்பில் போலியான அறிக்கையை வெளியிடும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்

இவ்வாறு தவறான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் அதிகாரிகளுக்கு தமது அமைச்சில் ஒருபோதும் இடம்கொடுக்க முடியாது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வெளிநாட்டு வேலைகளுக்காக செல்பவர்கள், 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா என்பது தொடர்பில் உறுதிப்பத்திரம் வழங்க 75 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை பணமும் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணம் பெரும் அதிகாரிகள் 25 முதல் 30 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.