உண்டியல் குலுக்கி அரசியலுக்கு வந்ததாக கூறும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று கோடீஸ்வரர் ஆனது எப்படி என அமைச்சர் தலதா அத்துகோரல கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் 100க்கும் மேற்பட்ட அரச வாகனங்களை பாவித்த விமல் எம்.பி> நாட்டு மக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பலாங்கொட பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நல்லாட்சி அரசாங்கத்தில் பழிவாங்கும் நடவடிக்கை இடம்பெறுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும், நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்தமையின் காரணமாகவே விமல் வீரவன்ச இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் மக்களுக்கு வீடு கட்டுவதற்காக ஒரு அடிக்கல்லையாவது நடாத விமல் வீரவங்ச, பொது மக்களின் பணத்தை சூரையாடலாமா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், விமல் எம்.பியின் சிகை அலங்காரத்துக்காக அமெரிக்காவிலிருந்து ஒரு வகை விசேட ஜெல் கொண்டு வரப்படுகின்றது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியை துண்டாட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராிபக்ச முயற்சித்த போதிலும், அது நடக்கவில்லை.
அத்துடன், கடந்த அரசாங்கத்தின் போது அரச ஊழியர்கள் தமது சொந்த அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






