நடிகர் சூர்யா – அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உலகெங்கும் ‘சி3’ படம் நேற்று முதல் வெளியிடப்பட்டது. திருச்சி மாநகரிலும் நிறைய திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. முன்னதாக, இப்படத்தை ஆன்லைனில் வெளியிடுவதை தடுக்கவேண்டும் என்று படக்குழுவினர் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து, அதில் வெற்றியும் கண்டனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இணையதளம் கோர்ட்டு உத்தரவை மீறி இப்படத்தை ஆன்லைனில் வெளியிடுவோம் என்று படக்குழுவுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இதுகுறித்த அறிந்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தனது ஏற்பாட்டின் பேரில் தமிழகமெங்கும் ‘சி3’ படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் 4 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி கண்காணிக்க வைத்தார்.
அப்போது, திருச்சி ரம்பா திரையரங்கில் ‘சி3’ படத்தை செல்போனில் பதிவு செய்து 8 பேரின் செல்போன்களை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







