பேட்ஸ்மேன் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும்: வங்காள தேச பவுலர் சொல்கிறார்

இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஐதாராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி, முரளி விஜய் ஆகியோர் சதம் அடித்தனர்.

இந்தியாவில் முதன்முறையாக விளையாடும் வங்காள தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் இன்றைய போட்டி குறித்து கூறுகையில் ‘‘இன்றைய தினம் விளையாடிய ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் பொறுமை காக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடக் கூடிய பந்துகளை வீசினால், அவர்கள் அதை எளிதில் கையாண்டு கொள்வார்கள். பந்து வீச்சாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் மட்டுமே அவர்களை வெளியேற்ற முடியும்.

இது எனக்கு புதிய அனுபவம். ஏனென்றால் நான் 3-வது டெஸ்டில்தான் விளையாடி கொண்டிருக்கிறேன். இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் இதுதான். பிளாட் டிராக்கில் பந்து வீசுவது புதிய அனுபவம். முதல் ஒரு மணி நேரத்தில் பந்து சற்று திரும்பியது. அதன்பின் ட்ரை மற்றும் பிளாட்டாக மாறியது. மாறாக இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்’’ என்றார்.